Why You Want EAS?

கிராம மட்ட பொருளாதார அபிவிருத்தியில் சிறு தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களின் பங்கு.

ஒரு சமுகத்தின் வெற்றி அச்சமுகத்தின் தொடற்சியான கல்வியிலேயே அதிகம் தங்கியுள்ளது இருப்பினும் கடந்தகால யூத்தச் சூழ்நிலை தகுந்த கல்விக்கான வாய்ப்புக்களை கிராமபுறங்களில் ஏற்படுத்தி தரவில்லை அதிலும் தொழிற்கல்வியின் பங்கு மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பின்னணியிலேயே காணப்படுகின்றது. அத்துடன் பாரிய தொழிற்சாலைகள் எதுவும் இம்மாவட்த்தில் இயங்கவில்லை. காணப்படும் தொழிற்சாலைகளும் சரியானமுறையில் தொழிற்படவில்லை. இதனால் வேலைவாய்ப்பின்மை மற்றும் கீழ் உழைப்பு என்பன அதிகரித்துக் காணப்படுவதுடன் வருமான ஏற்றத்தாழ்வுகளும் வெளிப்படையாக அளவிடக்கூடியதாகவுள்ளது. இம்மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் போதுமான இயற்கைவளங்களையும் இதமான காலநிலையையும் கொண்டிருந்த போதும். ஏதிர்பாராத அனர்த்தங்களினால் இம்மாவட்டம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகின்றது. உபசரிப்பில் அர்ப்பணிப்புள்ள மீன்பாடும் தேன்நாடு இலங்கையின் புள்ளி விபரங்களின் படி சராசரிக்கும் குறைவான பொருளாதார அபிவிருத்திக் குறிகாட்டிகளை கொண்டிருப்பதற்கு ஏதுவான பலகாரணிகள் காணப்பட்டபோதும் ஒரு மனிதனின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதில் பிரதான பங்களிப்பு செய்யும் வணிக முயற்சியாண்மை கிராம மட்டத்தில் வெற்றிகரமாக வளர்ச்சியடையாமை முக்கிய காரணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புற தொழில் முயற்சியாளர்களும் உற்பத்திக்குழுக்களும் சமுகமட்ட தொழில் முயற்சிகளும் இலாப வளற்சியற்ற ஜீவனோபாய தொழில்களையே அதிகம் நம்பியுள்ளதுடன் பெரும்பாலான தொழில்கள் உரிய முறைமைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படாமையுடன் இலாப நட்டமற்ற புள்ளியிலும் கீழான மட்டத்திலையே உற்பத்தி மற்றும் விற்பனை மட்டங்கள் காணப்படுகின்றது மேலும் சமாதானத்தின் பின்னரான நிதி நிறுவனங்களின் பாரிய பரப்புரைகள் வளற்சி மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வெற்றிகரமான தொழிற்பாடுகள் கிராம முயற்சியாளர்களின் மூலதன ஈட்டத்தில் உரிமை நிதியிலும் அதிகமான கடன் நிதி கிடைக்கும் வாய்ப்பை எற்படுத்தியுள்ளது இது ஒரு வகையில் சாதகமாக உள்ளபோதும் மறுபுறம் பல சமுகப் பிரச்சினைகளுக்கு ஏதுவாக அமைந்து காணப்படுவதுடன் மக்களின் கடன் சுமையையும் அதிகரித்துள்ளது.

கிராம மட்ட உற்பத்தியாளர்கள் அவர்களின் வணிகப் பெறுமதிச் சங்கிலியில் முதலாம் மட்டத்தில் மாத்திரம் காணப்படுவதுடன் அதன்பின்னரான பெறுமதி சார் நடவடிக்கைகள் எதுவும் தெரியாத நிலையில் காணப்படுவதனை அவர்களுடனான நேரடிக் கலந்துரையாடல்கள் மூலமும் பயிற்சிகளின் மூலமும் எங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்துடன் அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவது அவர்கள் எதிர் நோக்குகின்ற பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன் கிரயவியல், விலையிடல், பொதியமைத்தல், உரிய வியாபாரப் பதிவுகள், அனுமதிகள் மற்றும் அங்கிகாரம் இல்லாமை வணிகத்தந்திரோபாயங்களில் போதிய விழிப்புணர்வின்மை மற்றும் அவர்களுக்கான வலயமைப்பு மற்றும் பரப்புரையின்மை காரணமாக அவர்களின் வணிக வெற்றி கேள்விக்குறியாகக் காணப்படுவதுடன் நிடித்து நிலைக்கக்கூடியதும் வியாபார வேறுபடுத்தல்களுடனும் நவின கருவிகள் மற்றும் நுட்பங்களுடனான உற்பத்தி மற்றும் வணிக முறைமைகள் இன்றி காணப்படுவதே அவர்களின் நோக்கத்தினை அடைவதில் பாரிய இடைவெளியாகக் காணப்படுவது பயிற்சின் தேவையினை மதிப்பிட மேற்கொண்ட சந்திப்புக்களிலும் கலந்துரையாடல்களிலும் ஆய்வூகளிலும் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படும் பொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய அரச அலுவலர்களுக்கு கிராம மட்டத்தில் உற்பத்திக்குழுக்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான வணிக ஆலோசனை சேவை வழங்கக்கூடியதாக பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி வளங்கப்பட்டு, புதிதாக பிரதேச செயலக மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார ஆலோசனை சேவைநிலையங்களில் பணிபுரியக்கூடியதாக மாற்றுவதுடன் உற்பத்திக்குழுக்கள் மற்றும் கிராம மட்ட நிறுவனங்கள், வணிக ஆலோசகர்கள் மற்றும் பிரதேசசெயலாளர் அல்லது அவரால் அங்கிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கி ஒரு பிரதேச மட்ட பொருளாதார ஆலோனை சபை ஒன்றினை நிறுவி அதன் மூலமாக மட்டக்களப்பு மாவட்த்தில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களை(SME) நடாத்திச் செல்லும் கிராம மட்ட முயற்சியாளர்களுக்கும் மற்றும் உற்பத்திக்குழுக்களுக்கும் ஆலோசனை சேவையினை எற்படுத்திக் கொடுத்தல்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பற்றிய வரைவிலக்கணம்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி(SMEs) என்ற சொல் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும். பல்வேறான நாடுகளும் தமது அபிவிருத்தி மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் பொருட்டு ஒவ்வொன்றுக்கும் மாற்றமான வரைவிலக்கணங்களைப் பயன்படுத்துகின்றன. பரவலாக பயன்படுத்தப்படுகின்ற அளவீட்டு அலகாக காணப்படுவது மொத்த ஊழியர் எண்ணிக்கை வருடாந்த மொத்தப்புரள்வு மற்றும் முழுமொத்த முதலீடு என்பனவாகும். இலங்கையின் சூழமைவினுள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டகத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு மொத்த ஊழியர் எண்ணிக்கை மற்றும் வருடாந்த மொத்தப்புரள்வை அடிப்படையாகக் கொண்டு வரைவிலக்கணமளிக்கப்படுகிறது.

அட்டவணை:1

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வரைவிலக்கணமளித்தல்.

சேவைத்துறைவருடாந்த மொத்தப்புரள்வுரூபா. 251-750 மில்ரூபா. 16-250 மில்ரூபா. 15 மில் விட குறைவு

துறை/அளவு தகுதி விதி நடுத்தர சிறிய நுண்
தயாரிப்புத்துறை வருடாந்த மொத்தப்புரள்வு ரூபா. 251-750 மில் ரூபா. 16-250 மில் ரூபா. 15 மில் விட குறைவு
ஊழியர் எண்ணிக்கை 51-300 11-50 10 விட குறைவு
ஊழியர் எண்ணிக்கை 51-300 11-50 10 விட குறைவு

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறையானது 300க்கு குறைவான ஊழியர் எண்ணிக்கையை சேவையில் ஈடுபடுத்துகின்றன. மொத்தப்புரள்வு ரூபா 750 மில்லியனைத் தாண்டாத தொழில் முயற்சிகளைக் கொண்டதாகும். இச் சூழமைவினுள் கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் பற்றியதாயின் நுண்பாக தொழில் முயற்சிகளும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி வகையாகக் கருதப்படும்.

வரைவிலக்கணத்தைப் பொறுத்தவரை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வரைவிலக்கணமளிக்கின்ற போது இந்த இரண்டு அளவு கோல்களும் கவனத்திற் கொள்ளப்படும். ஏதேனுமொரு தொழில் முயற்சி ஒரு வகையை விட பலவற்றில் சேர்கின்ற போது தொழில் புரிவோர் மட்டுமே தீர்க்கமான காரணியாக அமைதல் வேண்டும். இந்த உயர் எல்லை தனித்தொழில் முயற்சிகளுக்கு மாத்திரமே ஏற்புடையதாக இருக்கும். பாரிய குழுமமொன்றின் பகுதியொன்றாக உள்ள நிறுவனத்தைப் பொறுத்தவரை அந்தக்குழுமத்தின் ஊழியர் எண்ணிக்கை மற்றும் மொத்தப்புரள்வையும் சேர்த்துக்கொள்ளல் அவசியமாகலாம். பாரிய கம்பனிகளின் இரண்டாம் நிலைத் தகவுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாகக் கருதப்படுவதில்லை. எவ்வாறாயினும் மேற்கூறப்பட்ட வரையறையினுள் வருகின்ற முழுக் குழுமத்தினதும் மொத்தப்புரள்வு மற்றும் ஊழியர் எண்ணிக்கை என்பன இதில் சேர்க்கப்படமாட்டாது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்கு வரைவிலக்கணமளிப்பதன் நோக்கம் யாதெனில் கொள்கைகளை இலக்கிடுவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பற்றிய தேசிய புள்ளிவிபரத் தரவுகளை வழங்குவதற்குமான மூலோபாயமொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகும். இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு அரச உதவிகளைப் பெறுவதற்கான வழிகாட்டலுக்கும் மிக விரிவான கொள்கை வீச்சிடையை இலக்கிடுவதற்குமான அடிப்படையாக சேவையாற்றும். இந்த வரைவிலக்கணம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் ஒரு தடவை ஆராயப்பட்டு நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்கு தேவையானவாறு திருத்தப்படல் வேண்டும்.

மூலம்:- இலங்கை மத்திய வங்கி